மதுரையில் வாலிபர் கடத்தி கொலை
மதுரை: மதுரையில் காணாமல் போன வாலிபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த ராமசாமி மகன் காளிமுத்து (18). இவரை கடந்த செப்டம்பர் 8ம் தேதியன்று அவரின் நண்பர்களான காந்தி, கண்ணன் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிமுத்து வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர்.
அந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் கீரைத்துரை போலீசார் வழக்குப் பதிவு காளிமுத்து காணாமல் போனது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக கமுதியை அடுத்த கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் காளிமுத்துவை முன் விரோதம் காரணமாக கோவிந்தராஜ், ஈஸ்வரன், பூமி, குரு, வழிவிட்டான் சிவசுப்பிரமணியன், வீரபத்திரன், பல்லு ஈஸ்வரன் ஆகியோர் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது.
அதன் பேரில் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
காணாமல் போன வாலிபரை கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications