துபாய் போலீஸ் அதிரடி வேட்டையில் 170 விபச்சாரப் பெண்கள் கைது
துபாய்: துபாயில், போலீஸார் நடத்திய அதிரடி விபச்சார வேட்டையில் 170 பெண்கள் சிக்கினர். அனைவருமே கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய விபச்சார வேட்டையை காவல்துறையினர் நடத்தியுள்ளனர். துபாயில் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையில் 170 விபச்சாரப் பெண்கள் உள்பட 247 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 12 பேர் புரோக்கர்கள். 65 பேர் சந்தேக வளையத்தின் கீழ் இருப்பவர்கள். சனிக்கிழமை நடந்த சோதனையில் இத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தலைவர் டாஹி கல்பான் கூறுகையில், விபச்சாரம் தொடர்பாக பல்வேறு வேட்டைகள் இதற்கு முன்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நடந்துள்ளது மிகப் பெரிய வேட்டையாகும் என்றார்.












Click it and Unblock the Notifications