ரேபரேலி கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
ரேபரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்ட நீதிமன்ற வாயிலில் 5 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இன்று கண்டெடுக்கப்பட்டதால் பீதி நிலவுகிறது.
கடந்த நவம்பர் 23ம் தேதி லக்னோ, பைசாபாத் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60பேர் படுகாயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் இந்த சதிகார செயலைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறை அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தியது. இந்நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை யொட்டி நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நீதிமன்றத்தின் பிரதான வாயில் அருகே அநாதையாக ஒரு சைக்கிள்
நின்று கொண்டிருந்தது.
அதில் கட்டி வைக்கப்பட்டிருந்த பையை போலீசார் சோதனையிட்டபோது அதில் சக்தி வாய்ந்த 5 வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு செயலிழக்கப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications