போலி என்கெளண்டர் கொலையை நியாப்படுத்திய மோடிக்கு சிக்கல்

டெல்லி: குஜராத்தில் போலி என்கெளண்டரில் சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசிய அம் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசுக்காக வாதாடி வரும் மூத்த வழக்கறிஞரான துள்சி, இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டதோடு மோடியையும் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.
அதே போல மோடி மீது இது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது.
சூரத் நகரில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, சொராபுதீனை சுட்டுக் கொன்றதில் எந்தத் தப்பும் இல்லை. இதற்காக என்னை சோனியா காந்தி தூக்கில் போடப் போகிறாரா.. முடிந்தால் செய்யட்டும் என்றார்.
அப்பாவியான சொராபுதீனை சுட்டுக் கொன்ற குஜராத் போலீஸார் அவரது மனைவியை கற்பழித்து எரித்துக் கொன்றுவிட்டனர்.
இந்த விவகாரத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நிலையில், உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வரும் நிலையில் தான் நரேந்திர மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
இதையடுத்து மோடிக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
போலி எண்கெளன்டர் நடத்தியதை முதல்வரே ஒப்புக் கொண்டு விட்ட நிலையில் இந்த வழக்கில் குஜராத் அரசுக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் துள்சி, அதிலிருந்து விலகியுள்ளார்.
சட்டத்தையும் நீதியையும் மோடி கேலிக்கூத்தாக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதே போல புகார்கள் உறுதியானால் தேர்தல் ஆணையமும் கடும் நடவடிக்கை எடுக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியும் கூறியுள்ளார்.
ஆனால், மோடி பேச்சு குறித்து சூரத் கலெக்டரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், நரேந்திர மோடியின் பேச்சு வெட்கக் கேடானது. ஒரு கிரிமினலின் தலையெழுத்தை சட்டம் தான் நிர்ணயிக்க முடியும். ஒரு மாநில முதல்வரோ, ஏன் பிரதமர் கூட நிர்ணயம் செய்ய முடியாது. போலி என்கவுன்டர் சம்பவத்தை நியாயப்படுத்தி கூறுவது மிகவும் மோசமானது என்றார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நரேந்திர மோடிக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படும் என்றார்.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறுகையில், நரேந்திர மோடியின் பேச்சு குறித்து மீடியாவில் பார்த்தோம். ஆனால், சூரத் மாவட்ட கலெக்டரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிக்கை வரவில்லை. அந்த அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய முடியும் என்றார்.
சூரத் கலெக்டர் அறிக்கை தருவாரா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications