கலெக்டர் காரை ஜப்தி செய்ய உத்தரவு!
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாண்டி, அம்பலம், தன்ராஜ், ராஜேந்திரன், மனோகரன் உள்பட 5 பேருக்கு சொந்தமான 55 சென்ட் நிலம் மதுரை உயர்நீதி மன்ற கிளை அமைக்க அரசின் சார்பில் கையகப் படுத்தப்பட்டது.
அதற்கு விலையாக சென்ட்டுக்கு ரூ.55 கொடுத்தனர். இந்த விலை மிகவும் குறைவாக உள்ளது என்று கூறி கூடுதல் விலை கோரி முதலாவது விரைவு நீதிமன்றத்தில் 5 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஒரு சென்ட்டுக்கு ரூ.7,200 கொடுக்க உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.
இதனால், பாக்கித் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 99 ஆயிரத்து 699 ஆக உயர்ந்தது. இந்த தொகையை வழங்காததால் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தனர்.
இம் மனுவை விசாரித்த நீதிம்ன்றம், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய் அலுவலர் ஆகியோர் பயன்படுத்தும் 2 அம்பாசிடர் கார்கள், முக்கியப் பிரமுகர்களின் பயன்பாட்டுக்கான 3 கார்கள், 10 மின்
விசிறிகள், 10 சேர்கள், 10 பீரோக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டனர்.
இதன்படி நேற்று நீதிமன்ற அமீனா தம்பித்துரை மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தார். அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய உயர் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் உரிய நஷ்ட ஈடு தொகையை
செலுத்தி விடுவாக கூறியதையடுத்து அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சம்வத்தால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications