அரசுக்கு எதிராக ேவளாண் மாணவர்களை தூண்டி விடுவதா-வீரபாண்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுக்கு எதிராக வேளாண் மாணவர்களை தூண்டி விடுவது முறையல்ல என்று மாநில வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு வேளாண்மை வளர்ச்சி அலுவலர் என்னும் பதவி உருவாக்கப்பட்டது. 5ம் ஊதியக் குழுவில் பொறியாளர், கால்நடை மருத்துவர்களுக்கு ஊதிய விகிதம் ரூ.2,000, வேளாண்மை அலுவலர்களுக்கு ரூ.1,820 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. என் முயற்சியால் தொழில்நுட்ப அலுவலர்களாக பாவித்து ரூ.2,000 ஊதிய விகதமாக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் பதவி உயர்வு பெற தகுதியில்லை என தகுதி குறைக்கப்பட்ட கூடுதல் வேளாண்மை இயக்குனர் பதவிகளை மீண்டும் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனுபவ தகுதியில்லாததால் பதவி உயர்வே கிடைக்காது என தவித்த வேளாண்மை பட்டம் பெற்ற 103 அலுவலர்களுக்கு விதியை தளர்த்தி, பதவி உயர்வு வழங்கப்பட்டது. 20 வருடங்களுக்கு மேலாக வேலைபார்த்து பதவி உயர்வின்றி இருக்கும் வேளாண்மை அலுவலர், தோட்டக்ககலை அலுவலர் (ஆராய்ச்சி) பதவிகளில் பணிபுரியும் 509 பேர் பணியிடங்கள் தரம் உயர்த்தப்பட்டு, வேளாண்மை பதவி இயக்குனர்களாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டிவிடுவது நியாயமானதல்ல.

வேளாண் மற்றும் சகோதர துறைகளில் வழங்கப்படும் சலுகைகள் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் 3 அடுக்கு முறையை 2 அடுக்கு முறையாக மாற்றியமைப்பதாக அரசு அறிவித்தது.

தற்போது காலியாக உள்ள 432 வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் (வேதியியல்) பதவிகளும் 1,707 உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களும் நிரப்பிட இம்மாதத்திலேயே அரசு நடவடிக்கை எடுக்கும்.

எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டி விடுவது முறையல்ல. பட்டதாரிகள், பட்டம் பயின்றவர்கள் என்று பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கு உரிய பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+