சென்னையில் திருமாவளவன் தலைமையில் தலித்-இஸ்லாமியர் எழுச்சி நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் இன்று மாலை வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி இன்று மாலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள புல்லா நிழற்சாலையில் இன்று மாலை 6 மணிக்கு தலித்-இஸ்லாமியர் எழுச்சி நாள் நிகழ்ச்சி என்ற பெயரில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு தொல்.திருமாவளவன் தலைமை தாங்க கவிக்கோ அப்துல் ரகுமான், தமுமுக தலைவர் ஹைதர் அலி சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏக்கள் ரவிக்குமார், செல்வபெருந்தகை உட்பட ஏராளமான தலித், முஸ்லிம் இன மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications