நுழைவுக் கட்டணம் உயர்வு: கோயம்பேடு வியாபாரிகள் போராட்டம்
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நுழையும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டதால் வியாபாரிகள் இன்று அதிகாலை சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை ஆட்டோ, மினிடோர் வாகனங்களுக்கு ரூ.10ம் வேன்களுக்கு ரூ.20ம், சரக்கு லாரிகளுக்கு
ரூ.110ம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் இந்த கட்டணங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென்று உயர்த்தப்பட்டது. அதன்படி ஆட்டோ, வேன் மற்றும் லாரிகளுக்கு முறையே ரூ.25, ரூ.45 மற்றும் ரூ.150 ஆக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று அதிகாலையில் காய்கறிகள் வந்த சரக்கு வாகனங்கள் மார்க்கெட் வளாகத்திற்கு செல்லாமல் ரோட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆதிமூர்த்தி தலைமை தாங்கினார்.
போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா. வெள்ளையன் உட்பட நிர்வாகிகள் அங்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். மார்க்கெட்டுக்குள் நுழைவு
கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வியாபாரிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர்.
அதன் பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கட்டண உயர்வை கைவிடுவதாக அறிவித்ததும் அனைத்து வாகனங்களும் மார்க்கெட்டிற்குள் சென்றது.
இது தொடர்பாக வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கூறுகையில்,
நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் எங்கள் எதிர்ப்பை மீறி அரசு கட்டண வசூலித்தது. தற்போது இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளனர்.
இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. இதை கைவிடா விட்டால் வியாபாரிகளின் அடுத்த கட்ட போராட்டம் நடக்கும் என்றார் வெள்ளையன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications