ஒருதலைக் காதல்: தொழிலதிபரின் மனைவியை கத்தியால் குத்திய என்ஜீனியர் கைது
சென்னை: தான் ஒருதலையாகக் காதலித்த பெண்ணின் தாயை முகமூடி அணிந்து வந்து கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய என்ஜீனியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் விமானங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளவர் சுரேஷ் குமார். இவரது மனைவி கல்பனா.
நேற்று காலை சுரேஷ்குமார் நடை பயிற்சிக்காக வெளியே சென்றபோது வீட்டில் கல்பனாவும் குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த ஒரு நபர் பின்புற காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறிக் குதித்து வீட்டுக்குள் புகுந்தான்.
கல்பனாவிடம் கத்தியை காட்டி, உன் மகள் எங்கே என்று கேட்டுள்ளான். மிரண்டு போன கல்பனா அலறவே அவரை கத்தியால் குத்தினான்.
சத்தம் கேட்டு அவர்களது நாய் ஓடி வந்து அந்த மர்ம நபர் மீது பாய்ந்தது, இதையடுத்து நாயையும் அவன் கத்தியால் குத்தினான்.
காயமடைந்த நிலையிலும் அவனை நாய் தொடர்ந்து தாக்கியது. நிலைமை உணர்ந்த கல்பனாவின் மகள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
கல்பனா கத்திய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வரவே அந்த நபர் தப்பி ஓடிவிட்டான்.
இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், 6 மாதத்துக்கு முன்பு சுரேஷ்குமார் தன்னிடம் வேலை பார்த்து வந்த தேனியைச் சேர்ந்த என்ஜினீயர் பாபு என்பவரை வேலையை விட்டு நீக்கியது தெரியவந்தது. தன் மகள் மீது பாபு ஒரு தலைக் காதல் கொண்டதால் அவரை வேலையை விட்டு தூக்கியதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் பாபுவிடம் விசாரித்தனர். அப்போது அவர்தான் முகமூடி அணிந்து வந்து கல்பனாவை கத்தியால் குத்தியவர் என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications