இலங்கைக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற மில் அதிபர் கைது
தூத்துக்குடி: இலங்கைக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற மில் அதிபரை உணவு பொருள் கடத்த தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீன்வள கல்லூரி அருகே கடந்த மாதம் 14ம் தேதியன்று தனியாருக்கு சொந்தமான கிட்டங்கிக்கு வந்த 4 லாரிகளை குடிமைப் பொருள் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 2,500 மூட்டை ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதில் தொடர்புடைய நபர்கள் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். பின்னர் இந்த வழக்கை சுங்க இலாகாவினர் விசாரித்ததில், ரேசன் அரிசியை 50 கிலோ எடை கொண்ட பைகளில் நிரப்பி பீகாக் பிராண்ட் என்ற பெயரில் இலங்கைக்கும், அதன் பின்னர் அங்கிருந்து பங்காளதேசுக்கும் கடத்தப்படவிருந்தது தெரியவந்தது.
இவ்வழக்கினை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து இது தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த மில் உரிமையாளர் பாலகோபால் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேர் நீதிமன்றத்தில் சரணைடந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications