11.47 நிமிடத்தில் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணவி

திருச்சியை அடுத்துள்ள மணப்பாறை அருகேயுள்ள குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வேந்திரனின் மகள் தீபா(10). இவர் அங்குள்ள ஊராட்சி பள்ளியொன்றில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் திருச்சியில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் முன்னிலையில், 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்க ஆரம்பித்தார். 11 நிமிடம் 47 விநாடிகளில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்து அனைவரையும் பிரம்மிக்க செய்து விட்டார்.
மாணவி தீபாவிடம் அங்கிருந்த நிருபர்கள் திருக்குறளில் உள்ள அதிகாரங்கள், குறளின் எண்ணை சொல்லி அதற்கான் குறளை கேட்டல் உட்பட பல கேள்விகளுக்கு சளைக்காமல் டக் டக்கென்று பதில்களை சொல்லி அசத்தினார்.
இவர் கடந்த ஆண்டு நடந்த பள்ளி பொன்விழா நிகழ்ச்சியில் 300 திருக்குறள்களை மனப்பாடமாக சொன்னார். இவருடைய திறமையை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் அவரை ஊக்கப்படுத்தியதால் அவர் தற்போது 1,330 குறள்களையும் ஒப்புவித்துள்ளார்.
மாணவி தீபாவின் இந்த சாதனை லிம்கா சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications