'மீடியா'க்களின் ஜாதி வெறி- அன்புமணி பாய்ச்சல்

டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் தொடர்பான விவகாரத்தில் என்னைப் பற்றி டெல்லியிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள், டிவி நிறுவனங்கள் தாறுமாறாக, தங்களது இஷ்டத்திற்கு செய்திகளை வெளியிடுகின்றன.
இதற்கு முக்கிய காரணம், நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதுதான். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியிடலாம் என அவர்கள் நினைத்து விட்டனர். ஆனால் இவர்களின் இந்த பாரபட்ச செய்தியால் எனக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது.
திமுக மீது அதிருப்தி:
எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான கட்டாய ஊரக சேவைத் திட்டத்திற்கு திமுகவிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்காதது வருத்தம் தருவதாக உள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, ஹவுஸ் சர்ஜன் படிப்பை முடித்த பிறகுதான் மாணவர்கள் கிராமப்புற சேவைக்கு அனுப்பப்படுவார்கள். இதன் மூலம் சிறந்த டாக்டர்களாக பணியாற்ற அவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.
மேலும் மூத்த டாக்டர்களுக்குக் கீழ்தான் அவர்கள் பணியாற்றப் போகிறார்கள். ஊரகப் பகுதிகளில் நிலவும் டாக்டர்கள் பற்றாக்குறையைப் போக்கத்தான் இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சாம்பசிவ ராவ் கமிட்டி தனது அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றார் அன்புமணி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications