இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய வீடுகள்!-கைவிரித்த அரசு!
கரூர்: கரூரில் குடிசை மாற்று வாரிய வீடு இடந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயமடைந்தார். ஆனால், வீட்டை பழுது பார்க்கும் செலவு அந்தந்த வீடுகளில் வசிப்பவரையே சாரும் என அதிகாரிகள் கூறிவிட்டனர்.
கரூர்-திருச்சி சாலையில் குழந்தானூர் அருகே தமிழக அரசின் குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் இதில் 112 வீடுகள் உள்ளன.
இதில் மேல் மாடி பகுதியில் டெய்லாரக வேலை செய்யும் ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ரவிச்சந்திரன் மனைவி வானதி 4 மாத கர்பிணியாக உள்ளார்.
சில நாட்களுக்கு முன் இவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது மேலே உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கதவு ஸ்லாப் திடீரென இடிந்து விழுந்தது. அது நேராக வானதி தலையில் விழுந்ததால் அவர் படுகாயமடைந்தார்.
அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பசுபதிபாளையம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
படுகாயமடைந்த வானதியை கரூர் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.
இந் நிலையில் திருச்சி கோட்ட பொறியாளர் ராமசாமி வெளிட்டுள்ள அறிக்கையில், குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 94-95ம் ஆண்டுகளில் இந்த வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
தவணை முறை விற்பனை திட்டத்தின் கீழ் வீடு அவர்களுக்கே சொந்தமாகும். மாத தவணை ரூ. 150 கட்ட வேண்டும். இந்த தொகையை அவர்கள் 20 ஆண்டுகளில் செலுத்த வேண்டும். பிறகு குடிருந்தவர்களுக்கு வீடு சொந்தமாகும். பராமரிப்பு பணியை ஒதுக்கீடுதாரர்கள் தங்களுக்குள் குழு அமைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications