இன்று நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தடுத்து சண்டையிட்டபோது உயிரிழந்த 6 பாதுகாப்புப் படையினருக்கும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். பிரதமர் உள்ளிட்ட தலைவர்களைக் கொல்லும் திட்டத்துடன் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர்.
அவர்களை எதிர்த்து டெல்லி போலீஸாரும், மத்திய ரிசர்வ் போலீஸாரும் தீரத்துடன் சண்டையிட்டு தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தனர்.
இந்த சண்டையில் 6 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாடாளுமன்றத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஆனால் அப்சல் குரு தாக்கல் செய்துள்ள கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதால் அவரது தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதலில் பலியான 6 பாதுகாப்புப் படையினருக்கும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆறு பேரின் புகைப்படங்களுக்கும் மலர் தூவி தலைவர்கள், எம்.பிக்கள் அஞ்சலி செலுத்தினர். ஆனால் இந்த நிகழ்ச்சியை பலியான 6 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புறக்கணித்து விட்டனர்.
அப்சல் குருவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பு முடிவை அவர்கள் எடுத்தனர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications