மன்னார் சண்டையில் 49 விடுதலைப் புலிகள், 26 ராணுவத்தினர் பலி
கொழும்பு: இலங்கையில் நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகள் தரப்பில் 49 பேரும், ராணுவத் தரப்பில் 26 பேரும் கொல்லப்பட்டனர்.
இந்த மோதல் குறித்து இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பு மீடியா மையம் வெளியிட்ட அறிக்கையில், மன்னார் மாவட்டம், தெற்கு மற்றும் மேற்கு அடம்பன் பகுதிகளில் நடந்த கடும் சண்டையில், பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
49 விடுதலைப் புலிகள் இறந்துள்ளதாக புலிகளின் தகவல் தொடர்புப் பேச்சை இடை மறித்துக் கேட்டபோது தெரிய வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் 26 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மன்னார் மாவட்டம் அடம்பன் மற்றும் பாலகுழி ஆகிய இடங்களில் நடந்த சண்டையில் 20 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பு அறிவித்துள்ளது. 75 பேர் காயமடைந்ததாகவும் அது கூறுகிறது.
இரு தரப்பும் கணிசமான அளவில் பலி எண்ணிக்கையை வெளியிட்டுள்ளதால் இந்த மோதலில் பெரிய அளவில் இரு தரப்புக்குமே உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications