மீண்டும் வங்கக் கடலில் தாழ்வு நிலை: தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். குறிப்பாக திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்யும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications