மில் அதிபர் கொலையில் 2 பேர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் நள்ளிரவில் மில் அதிபர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டைகாடு பகுதியை சேர்ந்த யாகப்ப உடையார் (வயது 60 ) உளுந்து அரவை மில் நடத்தி வந்தார். அரவை மில்லை ஒட்டியே இவரது வீடு உள்ளது.
கடந்த 13ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இவரை கதவை உடைத்துக்கொண்டு புகுந்த சிலர் அடித்து உதைத்தோடு அவரது தலையில் எடைக் கல்லால் தாக்கிவிட்டு, பட்டா கத்தியால் வெட்டினர். இதில் அதே இடத்தில் யாகப்ப உடையார் பலியானார்.
வீட்டு பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பியது.
இது குறித்து இனஸ்பெக்டர் ஜோதிராஜ் , இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இந் நிலையில் தொண்டைமான் நகர் மணி, திருச்சி காஜா ஆகியோருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்ததையடுத்து இவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications