நிறைவேறியது இலங்கை பட்ஜெட் - தப்பியது ராஜபக்சே அரசு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2008ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேறியது. இதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், ஆட்சி கவிழுமோ என்ற பரபரப்பு முடிவுக்கு வந்தது.
இலங்கையில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆளுங் கூட்டணியில், இடம் பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்கட்சி சமீபத்தில் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. மேலும் அந்தக் கட்சியின் சார்பில் அமைச்சர்களாக இருந்தவர்களும் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இதனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியானது.
இந்த பின்னணியில் நடந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில், பட்ஜெட்டுக்கு ஆதரவாக 114 வாக்குகள் கிடைத்தன. 67 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
வாக்கெடுப்பின்போது ஆளுங் கூட்டணியில் இடம்பெற்றிருநத ஜனதா விமுக்தி பெரமுணா கட்சியின் 37 உறுப்பினர்களும், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பி அனுரா பண்டாரநாயகேவும் அணி மாறி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
ஒரு வழியாக பட்ஜெட் நிறைவேறியதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்ற கருத்து வலுப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 166.44 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 139.4 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications