ஆக்கிரமிப்பு நிலங்களை பிரித்து ஏழைகளுக்குத் தர வேண்டும் : சரத்குமார்

சென்னை: தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ள நிலங்களை மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, மின்சார தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களும் இதனால் வேலை இழந்து கஷ்டப்படுகிறார்கள்.
இவற்றையெல்லாம் விட்டு விட்டு மின் நிலையங்கள் அமைப்பதில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறவினருக்கு பங்கு இருப்பதாக கூட்டணி கட்சியான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியதும், விளைநிலங்களை ஆக்கிரமித்து ராமதாஸ் கல்வி நிலையங்களை கட்டி வருகிறார் என்று ஆற்காடு வீராசாமி ஆதாரங்களை அள்ளி வீசுகிறார்.
எங்கள் பின்னணியை கிளறினால் உங்கள் தவறுகளை முன்னணிக்கு கொண்டு வருவோம் என்பது போல அமைச்சர் ஆவேச அறிக்கை தருகிறார்.
வன்னியர் கல்வி அறக்கட்டளை, விளை நிலங்களை பயன்படுத்தியிருந்தாலும், அது பிற்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக பயன்படுகிறது. ஆனால் பல தனியார் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் என்ற பெயரால் அரசு நிலங்களை ஆக்கிரமித்து இருந்தால், அவற்றை மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு பட்டாவுடன் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications