கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு-அரவாணிகள் கோரிக்கை
சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரவாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவாணிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அரசின் சார்பில் சென்னையில் பொது விசாரணை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அரவாணிகள் கண்ணீர் மல்க கூறியதாவது,
நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் சமூக அந்தஸ்து தேவை எனக்கோரி 45 வருடங்களாக போராடி வருகிறோம். இன்றுவரை பலனில்லை. முன்பெல்லாம் எங்களை அலி, பேடி, ஒன்பது, உஸ்லாம் என பலவாறு அழைத்து வந்தனர்.
பல ஆண்டுகள் போராடியதால் 1998ம் ஆண்டு அரவாணி என்ற பெயர் கிடைத்தது. அரவாணி என்றாலே செக்ஸில் ஈடுபடுபவர்கள் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது.
பள்ளி பருவத்தில் ஏற்படும் மாற்றத்தால் சக மாணவர்கள், குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்குவதால் பள்ளி, வீட்டை விட்டு வெளியேறுகிறோம். எங்கும் வேலை கிடைப்பதில்லை. பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால் செக்ஸ் தொழிலுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டு, நோயுண்டு இறக்கிறோம்.
பேருந்தில் கூட ஆண்கள் வரிசையில் அமர்ந்தால் கிண்டல். பெண்கள் வரிசையில் அமர்ந்தால் அருவருப்பான பார்வை. அரவாணிகள் என்றால் யாரும் வாடைக்குக் கூட வீடு தருவதில்லை. ஆயுள் காப்பீடு உள்ளிட்ட எந்த காப்பீடுகளுக்கும் நாங்கள் அருகதை கிடையாது. மருத்துவ வசதி கூட எங்களுக்கு கிடைப்பதில்லை.
வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனை, நாய் போன்றவைகளின் இஷ்டத்தை புரிந்து கொள்ளும் மனிதர்கள் எங்கள் இதய வலியை கண்டுகொள்வதில்லை.
இதற்கு முடிவுகட்ட அரவாணிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி, சிறப்பு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் அரவாணிகளுக்கு கவுரவமான வாழ்க்கை அமையும் என்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications