வட சென்னையில் மீண்டும் வாயுக் கசிவு - மக்கள் பீதி
சென்னை: வட சென்னையில் நேற்று இரவு மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
வட சென்னை மற்றும் மத்திய சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம வாயு கசிவு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணலியில் உள்ள சென்னை பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திலிருந்து வெளியான ஹைட்ரோகார்பன்கள்தான் இதற்குக் காரணம் என்பது பின்னர் தெரிய வந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மர்ம வாயு கசிவு நுகரப்பட்டது. இதை நுகர்ந்த பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி நிலவியது.
இதுகுறித்து விசாரணையில் இறங்கிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நுகரப்பட்டது விஷ வாயு அல்ல, சென்னை பெட்ரோககெமிக்கல் நிறுவனத்திலிருந்து வெளியான ஹைட்ரோகார்பன்கள்தான் என்று விளக்கினர். அந்த ஆலையில் நடந்த சுத்தப்படுத்தும் பணியின்போது இவை வெளியாயின. இதையடுத்து சுத்தப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டு ஹைட்ரோ கார்பன் வெளியாவது தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் வட சென்னையில் உள்ள வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், எருக்கஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு வாயுக் கசிவு இருந்ததாகவும், இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் கூறினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications