இலங்கைக்கு ராணுவ உதவி கூடாது - பிரதமருக்கு வைகோ கடிதம்
சென்னை: இலங்கைக்கு எக்காரணம் கொண்டும் ராணுவ ரீதியிலான உதவிகளை இந்திய அரசு அளிக்கக் கூடாது. தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் போருக்கு இந்தியா எந்தவிதமான ஆலோசனைகளையும் கூறக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் இலங்கை அரசுடன் கை கோர்த்துக் கொண்டு, மத்திய அரசுக்குத் தவறான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூறி வருகின்றனர்.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆயுத உதவிகளையும், பிற போர் உத்தி உபாயங்களையும், ராணுவ உதவிகளையும் அளித்து வருமானால், அது தமிழ் மக்கள் மனதில் நீங்காத கோபத்தையும், விரக்தியையும், துவேஷத்தையும் ஏற்படுத்தவே வழி வகுக்கும்.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு தமிழனும் சிந்தும் ரத்தத்திற்கும், ஒவ்வொரு தமிழனின் உயிரிழப்புக்கும் இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் போரில், இலங்கை அரசுக்கு ஆலோசனைகள் கூற இந்தியாவிலிருந்து பாதுகாப்பு துறை நிபுணர்கள் கொண்ட குழு இலங்கை சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை கண்டித்து மிகுந்த வேதனையுடனும், துயரத்துடனும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications