எல்.டி.டி.இ ஆதரவு வேண்டாம்: திருமா.வுக்கு காங்கிரஸ் கோரிக்கை
சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தருவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவு தருவதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார் திருமாவளவன். அதை ஏற்க முடியாது.
ராஜீவ் காந்தியைக் கொன்ற ஒரு இயக்கத்திற்கு, அந்த இயக்கத்தின் தலைவர் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இயக்கத்திற்கு எப்படி தார்மீக அடிப்படையில் ஆதரவு தர முடியும்?
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. எனவே அந்த அமைப்புக்கு எந்த வகையில் ஆதரவு அளித்தாலும் அது சட்டவிரோதம்தான்.
மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு தார்மீக ஆதரவு அளிக்க முடியுமா. அப்படிச் செய்வது மகாத்மா காந்தி கொலையை நியாயப்படுத்தாது என்று கூற முடியுமா.
விடுதலைப் புலிகளுக்கு தெரிவித்து வரும் ஆதரவை திருமாவளவன் கைவிட வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார். எனவே இதுபோன்ற கருத்துக்களைக் கூறி தமிழக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்று அக்கட்சியைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணசாமி.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications