மாயாவதிக்கு லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாதிகள் குறி?
லக்னெள: உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கு லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வந்துள்ளதால் போலீசார் அவருக்கு கடும் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 15 மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உளவுப்பிரிவு போலீசார் பல இடங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் உளவுத்துறை போலீசார் தொலைபேசி உரையாடல்களை கண்காணித்ததில் உத்தரப்பிரேதசத்தில் முக்கியமான ஒருவரை கொல்வதற்கு நேபாளம் அல்லது பாகிஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக தெரிய வந்தது.
2 பேர் கொண்ட தற்கொலைப் படை தாக்குதல் தீவிரவாதிகளான அவர்கள் நேபாள் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும், அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் உயர் பதவியில் உள்ள ஒரு அரசியல்வாதியின் மீது தற்கொலைப் படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அவர்களின் குறி அனேகமாக உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியாகத் தான் இருக்கும் என உளவுத்துறை சந்தேகிக்கிறது. தொலைபேசி உரையாடல், நேபாளில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு பேசப்பட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் மாயாவதிக்கு தற்போது பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை கடத்துவதற்காக வந்த 3 தீவிரவாதிகளை போலீசார் உத்தரப் பிரதேசத்தில் தான் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications