இளங்கோவன் கொடும்பாவியை எரித்த விடுதலை சிறுத்தைகள்
கரூர்: கரூரில் மத்திய இணையமைச்சர் இளங்கோவனின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சமீபத்தில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் திருமாவளவனாக இருந்தாலும் சரி, பெருமாவளவனாக இருந்தாலும் சரி. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இளங்கோவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்த கரூர் பேருந்து நிலையம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பிற்பகல் 12.25 மணியளவில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் அகரமுத்து தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
தடையை மீறி ஊர்வலம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அப்போது மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேர் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் உருவ பொம்மை எரித்ததற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications