திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சு.சுவாமி கோரிக்கை
சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவியாகவும், ஆதரவாகவும் திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், திமுக அரசின் தேச விரோத செயல் குறித்தும் தொடர்ந்து மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரு முக்கியத் தலைவர்களை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அப்படி இருக்கையில், அந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசு பதவியில் நீடிக்கத் தகுதி இல்லை. அதை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1991ம் ஆண்டும் இதே காரணத்திற்காகத்தான் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டிய கடமை சோனியா காந்திக்கு உள்ளது.
கணவரை இழந்த எந்த ஒரு இந்தியப் பெண்மணியும், தனது கணவரைக் கொன்றவர்களுடன் கூட்டு சேர மாட்டார் என்பதால் இந்தக் கேள்விக்கு சோனியா காந்தி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications