பெரு வெள்ளம் - அபாயத்தில் அமராவதி பாலம்
கரூர்:கடும் மழை காரணமாக இடியும் அபாயத்தில் கரூர் அமராவதி பாலம் உள்ளது.
கரூரில் அமராவதி நதியின் குறுக்கே பாலம் கட்ட 1998 ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக அரசு அனுமதி அளித்ததது. இதற்கான ஒப்பந்தம் இசிசிஐ என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ 13 கோடியில் கட்டுமான பணிகள் முடிந்து 2000ம் ஆண்டு இப் பாலம் திறக்கப்பட்டது.
அமராவதி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் புதிய பாலம் 2005ம் ஆண்டு நவம்பர் 24 ம்தேதி பழுதடைந்தது. இதையடுத்து பாலம் கட்டுமானத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அது குறித்து விசாரிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டார்.
2005ல் பாலத்தை பார்வையிட்ட நிபுணர்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பால பராமரிப்பை டிச 19 ம் தேதி அரசே ஏற்று சுங்கவரியை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் பாலம் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சி துறை அமைச்சர் கோசி மணி மற்றும் உயர் அதிகாரிகள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கரூர் நீதி மன்றத்தில் நடந்தது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் அளித்த அறிக்கையின் படி அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கன மழையால் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகின்றது. ஆற்றங்கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ள நீர் ஆற்றில் வேகமாக வருவதால் அமராவதி பாலத்தில் செல்ல இரவில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் பகல் நேரத்தில் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொது மக்கள் அந்த பாலத்தில் செல்வதா வேண்டாமா என குழம்பிப் போய் உள்ளனர்.
மேலும் வெள்ள நீரால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள பல கிராமங்கள் கடும் சோதனையை சந்திக்க நேரிடும். ஏற்கனவே இதே போன்ற மழை காரணமாகத்தான் அமராவதி பாலம் சேதமானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் அமராவதி பாலததை சீர் செய்யவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications