இந்திய விமானப் படை விமானத்தில் தீ
Subscribe to Oneindia Tamil

சூர்யா கிரண் விமானங்கள் விமானப் படையினருக்கு பயிற்சியளிக்கவும், விமான சாகஸ நிகழ்ச்சிகள் நடத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று காலை ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரில் பிஜூ பட்நாயக் விமான நிலையத்தில் சூர்யா கிரண் விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பப்பட்ட பின் அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது.
அப்போது அதில் தீப் பிடித்துக் கொண்டது. விமானி சுதாரிப்பதற்குள் அந்த விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது. அடுத்த வினாடியே விழுந்து நொறுங்கியது. விமானி காயமின்றி தப்பிவிட்டார்.












Click it and Unblock the Notifications