'கடத்த' விமானம் கிடைக்காமல் தவித்த அதிகாரிகள்!
கோவை: கோவை விமான நிலையத்தில் விமானக் கடத்தல் ஒத்திகைக்காக விமானம் கேட்டு, எந்த நிறுவனமும் விமானம் தர முன்வராததால், கடைசியில் பஸ் ஒன்றைக் கொண்டு வந்து கடத்தல் ஒத்திகையை நடத்தினர்.
கோவை விமான நிலையத்தில், கோவை காவல்துறையின் விமானக் கடத்தல் தடுப்பு கமிட்டியின் சார்பில் விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகையை இன்று நடத்தத் தீர்மானித்தனர். காலை 11 மணிக்கு இந்த ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒத்திகை நிகழ்ச்சிக்கு விமானம் தர தனியார் விமான நிறுவனங்கள், இந்தியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால் விமானம் கிடைக்காமல் அதிகாரிகள் குழம்பி விட்டனர்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் ஒரு பஸ்சைப் பிடித்துக் கொண்டு வந்து அதை வைத்து கடத்தல் ஒத்திகை நிழ்ச்சியை நடத்தினர்.
முன்னதாக, கடத்தல் தடுப்பு கமிட்டியின் தலைவரும், கோவை மாநகர காவல்துறை ஆணையருமான காந்திராஜன், விமான நிலையத்திற்கு, ஒத்திகை நிகழ்ச்சியைப் பார்க்க வந்தபோது அவரை உள்ளே விட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் காந்திராஜன், நான் போலீஸ் கமிஷனர், ஒத்திகை நிழ்ச்சியைப் பார்க்க வந்ததாக விளக்கினார். ஆனாலும் பாதுகாப்புப் படையினர் அவரை அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் உதவி போலீஸ் ஆணையர் சண்முகப் பிரியா தலையிட்டு, பாதுகாப்புப் படையினரிடம் விளக்கிய பிறகே கமிஷனரை உள்ளே விட்டனர்.
இன்று காலை நடந்த இந்தக் குழப்பத்தால் கோவை விமான நிலையத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications