எஸ்.ஐ.யை அரிவாளால் வெட்டிய ரவுடிக்கு வலைவீச்சு
தஞ்சாவூர்: சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பிய ரவுடியை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் மகாதேவன்.
இவரிடம், ராவுசாப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் மேரி என்கிற பெண் இளையராஜா என்பவர் மீது புகார் கொடுத்தார். அதுகுறித்து விசாரிக்க மகாதேவன், ஏட்டுடன் பைக்கில் ராவுசாப்பட்டிக்குச் சென்றார்.
அப்போது வழியில் சங்கர் என்ற ரவுடி வந்தார். இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளி வந்தவர் ஆவார். ஆனால் கோர்ட்டுக்கு மீண்டும் வராமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சங்கரைப் பார்த்த மகாதேவன், வண்டியை நிறுத்தி அவரை அழைத்தார். அப்போது மகாதேவனிடம் நெருங்கி வந்த சங்கர், என்னை அவமானப்படுத்தி விட்டாயே என்று கோபமாக கூறியபடி, மகாதேவனை அரிவாளால் வெட்டினார்.
இதில் மகாதேவனுக்கு இடுப்பில் பலமாக வெட்டுப்பட்டது. பின்னர் சங்கர் ஓடி விட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன ஏட்டு, மகாதேவனை தனியார் மருத்துவமனையில் கூட்டி வந்து சேர்த்தார்.
சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற ரவுடியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications