சில்லறை பாக்கியை மணியார்டரில் அனுப்பிய அரசு பஸ் டிப்போ
நெல்லை: பயணியின் 50 ரூபாய் பாக்கிப் பணத்தை மணி ஆர்டரில் அனுப்பி வைத்து அசத்தியுள்ளது சங்கரன்கோவில் அரசுப் பேருந்து டிப்போ நிர்வாகம்.
நெல்லை அருகே உள்ள தச்சநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கடந்த வாரம் நெல்லையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு அரசு பஸ்சில் சென்றார்.
டிக்கெட் கட்டணத்துக்காக கண்டக்டரிடம் 100 ரூபாயை நீட்டினார். டிக்கெட் கட்டணம் ரூ.17.50 போக மீதி ரூ.32.50ஐ கொடுத்த கண்டக்டர் பாக்கி 50 ரூபாயை பிறகு தருவதாக கூறியதுடன் அதை டிக்கெட்டின் பின்புறம் எழுதி மாரியப்பனிடம் கொடுத்தார்.
சங்கரன்கோவில் பஸ்நிலையத்திற்கு சென்றதும் கண்டக்டரிடம் மீதி பணத்தை வாங்காமல் மறதியில் மாரியப்பன் சென்று விட்டார். கண்டக்டரும் பணி முடிந்து சென்று விட்டார். பின்னர் ஞாபகம் வந்ததும் ஓடிவந்த மாரியப்பன் பஸ்சில் வேறு கண்டக்டர் இருந்ததை கண்டார்.
உடனே பஸ்சின் நம்பர், தடம் எண் போன்றவற்றை குறித்து கொண்ட மாரியப்பன், தன்னிடம் கண்டக்டர் கொடுத்த டிக்கெட்டின் ஜெராக்ஸ் நகல் ஆகியவற்றுடன் அரசு போக்குவரத்து கழக சங்கரன்கோவில் கிளை மேலாளருக்கு கடிதம் எழுதினார்.
கடிதம் குறித்து கிளை மேலாளர் கண்ணன் விசாரணை நடத்தினார். விசாரணையில் பாக்கி தர வேண்டியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து பாக்கி பணமான ரூ.50ஐ மாரியப்பனுக்கு மணியார்டர் மூலம் அனுப்பி வைத்தார் கண்ணன்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications