'செண்பகம் வைர வாஞ்சிநாக் குன்றக்கோதை வலவமாற வழுதி'!!!!!
சென்னை: உலக அமைதிக்காக சென்னையைச் சேர்ந்த 3 பேர் மலேசியாவில் சைக்கிளில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் செண்பகம் வைர வாஞ்சிநாக் குன்றக்கோதை வலவமாற வழுதி (அவருடைய பெயரே தான்). இவர் டெல்லியில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு உலகை சைக்கிளால் சுற்றி வரவேண்டும் என்று நீண்ட நாள் கனவாக இருந்ததாம். இவருடைய முயற்சிக்கு தமிழக அரசும், அவர் பணிபுரியும் பள்ளி நிர்வாகமும் உதவ முன்வந்தன. இதைத் தொடர்ந்து கிழக்கு ஆசிய நாடுகளில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து செண்பகம் மற்றும் அவரது உறவினர்களான ராஜேஷ்குமார், சுரேந்திரன் ஆகிய 3 பேரும் உலக அமைதிக்காக சைக்கிளில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக செண்பகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த 17 வருடங்களாக நான் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். நான் இதுவரை 9 லட்சத்து 86 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் மூலம் பயணம் செய்துள்ளேன். இதற்கு முன்னர் 6 லட்சத்து 43 ஆயிரம் கிலோ மீட்டம் பயணம் மேற்கொண்டதே கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் இந்தச் சாதனையை பல ஆண்டுகளுக்கு முன்னர் முறியடித்து விட்டேன்.
இதுவரை என்னுடைய சாதனையை கின்னஸ் சாதனையாக அறிவிப்பு செய்யப்படவில்லை. கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட பின்னரே, என் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்வேன். கோலாலம்பூரில் இருந்து தாய்லாந்து வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இந்த பயணத்தை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்வதே என் கனவு என்றார் செண்பகம்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications