ஜெயிலரின் செல்போனை திருடிய பலே கைதி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மத்திய சிறையில் ஜெயிலர் வைத்திருந்த செல்போனை கைதி திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மத்திய சிறை ஜெயிலராக உள்ள கருப்பண்ணனின் வீட்டை சுத்தம் செய்வதற்கு பவானியைச் சேர்ந்த கைதி ஒருவர் ஈடுபடுத்தப்பட்டார்.
அப்போது ஜெயிலர் கருப்பண்ணனின் வீட்டில் இருந்த அவரது செல்போனை நைசாக எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் பணி முடிந்து திரும்பும்போது, சிறையில், மெட்டல் டிடெக்டர் வைத்து கைதிகளை சோதனையிட்டனர்.
அப்போது சம்பந்தப்பட்ட கைதியிடமிருந்து பீப் சத்தம் வந்தது. இதையடுத்து அவரை சோதனையிட்டபோது செல்போனை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ஜெயிலர் வீட்டிலிருந்து செல்போன் திருடியதை அவர் ஒத்துக் கொண்டார்.
யாரிடம் பேசுவதற்காக செல்போனை அவர் திருடினார் என்று சேலம் சிறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications