ராணுவ சாலை மூடலை படம் பிடித்த பிரெஞ்சு நிருபர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் தெற்கு காலே மாவட்டத்தில் ராணுவத்தால் சாலை மூடப்பட்டிருந்ததை படம் பிடித்த பிரெஞ்சு தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர்களை ராணுவத்தினர் கைது செய்தனர்.
நேற்று இரவு காலே மாவட்டத்தில் உள்ள முக்கியச் சாலையை ராணுவம் மூடியது. இதை பிரான்ஸைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த 2 பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்தனர்.
மேலும் ராணுவம் பிடித்து வைத்திருந்த ஒரு தமிழ்க் குடும்பத்தையும் அவர்கள் படம் பிடிக்க முயன்றனர். இதையடுத்து அந்த இரு பத்திரிக்கையாளர்களையும் ராணுவம் கைது செய்து விடிய விடிய காவல் நிலையத்தில் வைத்திருந்தது.












Click it and Unblock the Notifications