காங். - தேமுதிக கூட்டணி வருமா? வாசன் சூசக பதில்
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி சேராது என்று கூறி விட முடியாது. இருப்பினும் அது வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ், தேமுதிக இடையே கூட்டணி வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை, அடையாறில் ஏழை, எளிய குழந்தைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச கம்ப்யூட்டர்களை ஜி.கே.வாசன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் முயற்சியில் அரும் பாடுபட்டு வருகிறது. மாற்றாத்தாய் மனப்பான்மை இல்லாமல் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
தமிழகத்தில் 8 முக்கிய துறைகளில் ரூ.39 ஆயிரத்து 871 கோடி செலவில் 65 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குஜராத் தேர்தலை பொறுத்தவரை வெற்றி தோல்வி சகஜமானது தான். உயர்ந்த கொள்கையுடன் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ளும். ஆனால் நரேந்திர மோடி செய்த அநியாயங்களை இந்த வெற்றியின் மூலம் நியாயப்படுத்திவிட முடியாது.
தமிழகத்தில் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவி கிடைக்க நானும் மத்திய அரசை வலியுறுத்துவேன். இந்த விஷயத்தில் தமிழகத்திற்கு உரிய மத்திய நிவாரண உதவிகள் கிடைக்க நானும் தமிழக அரசுக்குத் துணை நிற்பேன்.
விஜயகாந்த்துடன் கூட்டணியா?
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது ஜனநாயக முற்போக்கு கூட்டணியாக செயல்படுகிறது.
விஜயகாந்தின் தேமுதிகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்குமா என்று கேட்டால், இல்லை என்று நான் ஒரேயடியாக கூற மாட்டேன். அதேசமயம், தேர்தல் வரும்போதுதான் காங்கிரசின் நிலை என்ன என்பது தெரிய வரும். அதுவரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கூட்டணியைப் பலப்படுத்துவது என்ற முக்கிய முடிவை கட்சி மேலிடம்தான் எடுக்கும் என்றார் ஜி.கே.வாசன்.
விஜயகாந்த்துடன் கூட்டணி வராது என்று கூற முடியாது என வாசன் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications