மணல் அள்ள எதிர்ப்பு - போலீஸ் - பொதுமக்கள் மோதல்
விருதுநகர்: விருதநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மணல் அள்ள பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி மணல் எடுக்க முயன்றவர்களை சிறை பிடித்தனர். இதனால் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
விருநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ளது நரிக்குடி. இதன் அருகில் உள்ள உலக்குடி வழியாக கிருதுமால்நதி செல்கிறது. இந்த ஆற்றில் மணல் அள்ள அரசு காண்ட்ராக்ட் விட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி மணல் அள்ள பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்த அருப்புக்கோட்டை சப் - இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை கலைந்து போக உத்தரவிட்டார். ஆனால் அதை கேட்காமல் சப்- இன்ஸ்பெக்டருடன் வந்த ஏட்டு முத்து முனியாண்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சிலர் ஏட்டு முத்து முனியாண்டியை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் ஏட்டு மீது தாக்குதல் நடத்திய 5 பேரை காவல் துறையினர் பிடித்து வைத்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி பொது மக்கள் விடியவிடிய காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டனர்.
இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முன்னாள் எம்எல்ஏ பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஏட்டை தாக்கியவர்களை போலீஸில் ஒப்படைப்பது என்றும், போலீஸ் பிடித்து சென்ற மூர்த்தி, கருப்பண்ணன், அங்குசாமி, முத்துசாமி, ராமசந்திரன் ஆகியோரை போலீஸார் விடுவிப்பது என்றும் என்று முடிவானது. இதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications