குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
கடையநல்லூர் (நெல்லை): நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையுடன் குளத்தில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். நகைத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன்கள் நடராஜன், லட்சுமி சேகர். இருவரும் கடையம் சத்திரம் பாரதி பள்ளியில் 9, 8ம் வகுப்பு படித்து வந்தனர்.
நவநீதகிருஷ்ணனின் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. இதில் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று காலை 8.30 மணி அளவில் நவநீதன் தனது இரு மகன்கள் மற்றும் உறவினருடன் ஊரில் உள்ள வடபத்து குளத்தில் குளிக்கச் சென்றார்.
அப்போது நடராஜனும், லெட்சுமி சேகரும் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்தனர். குளித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் உறவினர்கள் இதை கவனிக்கவில்லை.
அனைவரும் குளித்து விட்டு கரையேறிய பின்னர் இருவரையும் காணாதது கண்டு திடுக்கிட்டனர். அதன் பிறகு குளத்தில் தேடி பார்த்தபோது அண்ணன், தம்பி இருவரும் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிறுவர்கள் உடலை கைப்பற்றி தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications