தமிழகத்தில் பெரும் தாக்குதலுக்கு நக்சலைட்டுகள் திட்டம்: 6 பேருக்கு வலை
சென்னை: தமிழகத்தில் பெரும் நாச வேலைகளில் ஈடுபடும் திட்டத்துடன் 6 நக்சலைட்டுகள் உலா வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒரு பெண்ணின் தலைமையில் அனுப்பப்பட்டுள்ள இந்த கும்பலைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலமாக நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முன்பு வட மாவட்டங்களில் தலை தூக்கியிருந்த நக்சல்வாதம் தற்போது தென் தமிழகத்திற்கு தனது இலக்கை திருப்பியுள்ளது.
குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை புதிய தளமாக அவர்கள் மாற்றியுள்ளனர். சமீபத்தில் பெரியகுளம் அருகே முருகமலை மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் பிடிபட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு வருசநாட்டு மலைப் பகுதியில் 5 நக்சலைட்டுகளை போலீஸார் கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் மடக்கிப் பிடித்தனர். அவர்களில் ஒருவர் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்என்பதால் போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பெரும் தாக்குதலை நடத்தும் பொருட்டு ஒரு பெண்ணின் தலைமையில் 6 பேர் கொண்ட நக்சலைட்டுகள் ஊடுறுவியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலை வருசநாட்டு மலைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது பிடிபட்ட நக்சலைட் தலைவர் மகாலிங்கம்தான் போலீஸாருக்குக் கொடுத்துள்ளார்.
முன்பு பெரியகுளம் அருகே பிடிபட்ட நக்சலைட் சுந்தரமூர்த்தியின் மனைவி சந்திராதான் இந்த நக்சலைட் கும்பலின் தலைவியாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் காளிதாஸ், சேகர், வேலு, ராஜா, நவீன் பிரசாத் ஆகியோர் அடங்கிய கும்பல் தமிழகத்தில் பெரும் நாச வேலைகளில் ஈடுபடும் திட்டத்துடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஊடுறுவியுள்ளதாம்.
இவர்களைப் பிடிக்க போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து 6 பேரையும் தேடி வருகின்றனர். தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் தீவிர வேட்டை நடந்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications