2011ல் ஆட்சியை பிடிப்போம்-பாமக
கோவில்பட்டி: தமிழகத்தில் வரும் 2011ம் ஆண்டில் பாமக ஆட்சியை பிடிக்கும் என அக் கட்சியைச் சேர்ந்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் பொன்னுச்சாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
வில்லிச்சேரி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடித்த சூறாவளி காற்றில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச் சோள பயிர்கள் சேதமாகியுள்ளன. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் பலனை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் பயிர்கள் நாசமாகி விட்டதால் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் நஷ்டஈடு வழங்க வேண்டும். கடந்த 23ம் தேதி எனது தொகுதிக்கு வந்த முதல்வரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 தர வலியுறுத்தினேன். அவர் ரூ.6,000 தருவதாக உறுதியளித்தார்.
அதே போல் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் ரூ.6,000 வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும். இந்த தொகையை மாவட்ட ஆட்சியர் மூலம் விரைவில் வழங்க வேண்டும்.
பாமக இலவசங்களை நம்புவதில்லை. மக்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் வரும் 2011ம் ஆண்டில் பாமக ஆட்சியை பிடிக்கும் என்றார் பொன்னுசாமி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications