ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் மாநாடு - திருமாவளவன்
ஈரோடு: ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஜனவரி 25ம் தேதி சென்னையில் மாநாடு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நம்பியூரைச் சேர்ந்த மாரியப்பனின் மகள் காதுகுத்து விழாவுக்கு திருமண மண்டபம் கேட்ட போது அந்த ஊர் பிரமுகர்கள் சிலர் தர மறுத்து விட்டனர்.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கோவணம் கட்டி ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் இப்பிரச்சனை குறித்து விசாரணை நடத்த வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நம்பியூர் சென்று இது குறித்து விவரம் கேட்டு அறிந்தார். பின்பு அவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் உயசந்திரனை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், தலித் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டும் இது அரசின் கடமை. நம்பியூர் பகுதியில் தலித் மக்களுக்கு என தனி திருமண மண்டபம் கட்ட வேண்டும். ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உடனே வீட்டு மனை வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது, நம்பியூர் தலித் மக்களின் உரிமைகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இது அரசின் கடமை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கோபியில் விடுதலை சிறுத்தைகள், பெரியார் திக, தலித் மக்கள் கட்சி போன்ற 12 அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்பாட்டம் நடத்த உள்ளோம்.
மேலும், ஈழத் தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவித்து வருகின்றது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. இது பற்றி பேசினால் விமர்சனம் எழுகின்றது. இது மக்களின் கருத்துரிமையை பாதிக்கும் செயல். இது பற்றி விளக்கிக் கூறும் மாநாடு ஜனவரி 25ம் தேதியன்று சென்னையில் நடத்தப்படும் என்றார்.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications