ஹைதாராபாத், உ.பி. குண்டுவெடிப்பு: தாவூத் இப்ராகிம் தொடர்பு அம்பலம்

லக்னோ: ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் உ.பி. மாநிலத்தில் நடந்த பல்வேறு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
உ.பியில் கடந்த வாரம் முகமமது அப்துல் மஜீத் உள்ளிட்ட இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஹர்கத் உல் ஜிஹாத் எனப்படும் ஹூஜி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களிடம் உ.பி. போலீஸார் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை மஜீத் வெளியிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள புகழ் பெற்ற மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கும், உ.பியில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கும் தாவூத் இப்ராகிமுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக மஜீத் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது பாகிஸ்தானில்தான் தாவூத் தங்கியிருப்பதாகவும், ஹூஜி அமைப்பினர் மூலம் இந்தியாவுக்குள் பெருமளவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு வருவதாகவும் மஜீத் தெரிவித்துள்ளார்.
தற்போது இரு தீவிரவாதிகளிடமும் ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மாநில போலீஸாரும் விசாரணை நடத்த வரவுள்ளனர்.
இந்த விசாரணையின்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு அரசு தொடர்ந்து பிடிவாதமாக கூறி வருகிறது. ஆனால் தாவூத் பாகிஸ்தானில்தான் இருப்பதாகவும், அவர்தான் இந்தியாவில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் எனவும் பிடிபட்டுள்ள ஹூஜி தீவிரவாதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் தாவூத் முக்கியக் குற்றவாளியாக உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications