ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் உடைப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலின் நுழைவு வாயிலில் இருந்த இரு உண்டியல்களை ஐயப்ப பக்தர்கள் தவறுதலாக உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல பூஜையில் கலந்து விட்டு, பக்தர்கள் ராமேஸ்வரம், மதுரை ஆகிய இடங்களில் உளள கோவில்களுக்கு செல்வது வழக்கம்.
அதே போல் இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஐயப்ப பக்தர்கள், நெருக்கடி அதிகமாக இருந்ததால் 1 மணி நேரம் கோவில் கதவை மூட சொல்லி சத்தம் போட்டனர். அப்போது அவர்கள் கோவில் நுழைவு வாயிலில் இருந்த இரண்டு உண்டியல்களை எதிர்பாரதவிதமாக உடைத்து விட்டனர்.
இதனால் உண்டியல்களில் இருந்த பணம், காசு உள்ளிட்டவை சிதறி கீழே விழுந்தன. இதையடுத்து அவற்றை சிலர் எடுக்கத் தொடங்கினர். இதையடுத்து கோவில் மூடப்பட்டது.
கோவில் அதிகாரிகள் விைரந்து சென்று உண்டியலிலிருந்து கீழே விழுந்த பணத்தையும், நாணயங்களையும் பத்திரமாக மீட்டனர்.
இதற்கிடையே, கோவிலை அதிகாரிகள் மூடியதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. கோவிலில் கூட்டம் அதிகம் இருப்பதால் மாற்று ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருக்க வேண்டும் என இந்து முன்னணி கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications