இலங்கையில் இருந்து வாரந்தோறும் 250 அகதிகள் வருகை
கடையநல்லூர்: இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வாரந்தோறும் 200 முதல் 250 அகதிகள் வந்து கொண்டுள்ளதாக அகதிகள் மறுவாழ்வு துறை துணை ஆட்சியர் டேவிட் பிரபுகுமார் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் அருகேயுள்ள அகதிகள் முகாமை டேவிட் பார்வையிட்டார். அவரிடம் அகதிகள், முகாமில் நிலவி வரும் மின் தட்டுபாடு, குடிநீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விளக்கினர்.
பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த மாதம் கடையநல்லூர் அகதிகள் முகாமை ஆய்வு செய்த மறுவாழ்வு துறை ஆணையர் இந்த முகாமில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசிற்கு மதிப்பீடு அனுப்பியுள்ளார். அதற்கான நிதியை தமிழக அரசு தற்போது வழங்கியுள்ளது.
எனவே இந்த அகதிகள் முகாமில் இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். தமிழகத்திற்கு கடந்த 2006ம் ஆண்டு வரை 17,000 அகதிகள் வந்துள்ளனர். தற்போது சராசரியாக வாரத்திற்கு 200 முதல் 250 வரை இலங்கையில் இருந்து அகதிகள் வருகின்றனர்.
அவர்கள் மறுவாழ்விற்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. இந்தியாவிலேயே அதிநவீன அகதிகள் மறுவாழ்வு மையம் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் டேவிட்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications