நெல்லையில் மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் போட்டி
நெல்லை: நெல்லையில் 4 மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கம்ப்யூட்டர் போட்டிகள் ஜனவரி 18, 19ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டானில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்கா அமைவதற்காக நெல்லையில் உள்ள இயற்கை வளங்கள், முக்கிய நிறுவனங்கள், வசதிகள் குறித்து குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்ப பூங்கா குறித்து மாணவ, மாணவிகளிடம் விளக்குவதற்காக 4 மாவட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கும் மெகா கம்ப்யூட்டர் போட்டிகளுக்கு எம்பவர் ஐ.டி எல்காட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தினருடன் எல்காட் நிர்வாக இயக்குனர் உமாசங்கர் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் பேசியதாவது,
நெல்லையில் ஜனவரி 18, 19 ஆகிய 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கம்ப்யூட்டர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்படடுள்ளது.
இந்த 2 நாட்களும் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 18ம் தேதி பாளை தூய சவேரியர் கல்லூரியிலும், 19ம் தேதி தீதகற்நல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டிகளின் நடுவர்களாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் செயல்படுவர். இதற்காக விப்ரோ, சத்யம் கம்ப்யூட்டர், டிசிஎஸ், எச்.சி.எல் உள்பட 18 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் நெல்லை வருகின்றனர் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications