மன்மோகன் இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்து தி.க. ஆர்ப்பாட்டம்
சென்னை: இலங்கை சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லக் கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையின் சுதந்திர தின விழா ஜனவரி 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிகிறது. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.
தமிழர்களுக்கு எதிராக இனப் போரை ஏவி விட்டுள்ளது இலங்கை அரசு. அப்படிப்பட்ட அரசு நடத்தும் விழாவில் பங்கேற்பது என்பது தமிழர்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தும். எனவே இந்த விழாவில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று அவருக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.
பிரதமரோ அல்லது அவரது சார்பிலோ யாரும் இலங்கை சுதந்திர தின விழாவில் பங்கேற்கக் கூடாது.
தமிழர்கள் 2ம் தர குடிமக்களாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த எந்த உயர் மட்டத் தலைவரும், அதிகாரியும் இலங்கை சுதந்திர தின விழாவில் பங்கேற்கக் கூடாது.
முதல்வர் கருணாநிதியும், பிரதமரிடம் எடுத்துச் சொல்லி அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பிரதமர் இலங்கைக்கு செல்லக் கூடாது.
2005ம் ஆண்டு ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாகியுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் கூட கிடைக்காத அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லக் கூடாது என்பதை வலியுறுத்தி 31ம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் வீரமணி.
திருமாவளவன் வேண்டுகோள்:
ஈழத்தமிழர்களை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஈவு, இரக்கமில்லாமல் கொன்று குவித்து வரும் சிங்கள ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருவதுடன் அந்த ராணுவம் நடத்துகின்ற விழாவில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது.
அவ்வாறு அவர் விழாவில் கலந்து கொண்டால் இத்தனை காலமும் சிங்கள ராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது சரிதான் என நியாயப்படுத்துவதாகவும், ஊக்கப்படுத்துவதாகவும் அமையும். அத்துடன் தமிழகத்தின் தமிழர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு பொருட்படுத்தாமல் கொச்சைப்படுத்துவதாகவும் அமையும்.
எனவே அந்த விழாவில் பிரதமர் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மத்திய அரசை வற்புறுத்தி பிரதமர் இலங்கை செல்வதை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 31ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்கிறோம் என்றார் திருமாவளவன்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications