பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் பிப்ரவரியில் இடிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் பிப்ரவரி மாதம் இடிக்கப்படும் என நகராட்சிகள் மண்டல நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் கூறினார்.
கொடைக்கானல் நகராட்சி பணிகளை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டலின் தளங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நவீன முறையில் இந்தக் கட்டடத்தை இடிப்பதற்கு ரூ.98 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறையில் வெடிவைத்து தகர்த்தால் 7 மாடியும் இடிந்து விழுந்து விடும். ஆனால் 2 மாடியை தவிர மேல் தளத்தில் உள்ள 5 மாடிகளையும் மட்டுமே இடிக்க வேண்டும்.
எனவே திருத்திய மதிப்பீட்டின்படி சாதாரண முறையில் இக்கட்டிடம் இடிக்க ரூ.75 லட்சம் தேவைப்படுகிறது. இத் தொகைக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு அரசுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. ஹோட்டலை இடிப்பதற்கான பணிகள் பிப்ரவரியில் துவங்கும் என்றார் சந்திரசேகரன்.
இந்த ஹோட்டல் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான ஊழல் வழக்கில் தான் மாஜி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை கண்டித்து தான் அதிமுகவினர் வேளாண்மைக் கல்லூரி மாணவிகளின் பஸ் எரித்து 3 உயிர்களைப் பறித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications