ராமர் பாலத்தைக் காக்கக் கோரி நாளை டெல்லியில் பேரணி
டெல்லி: டெல்லியில் நாளை ராமர் பால பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள பேரணியையொட்டி டெல்லி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படடுள்ளது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ராமர் பால பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ராமர் பாலத்தை காக்கக் கோரி நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் நாளை டெல்லியில் பேரணி நடத்தவுள்ளனர்.
வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.
இதையொட்டி டெல்லி நகரின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக டெல்லி நகரில் உள்ள மூன்று முக்கிய ரயில் நிலையங்களான புதுடெல்லி, பழைய டெல்லி மற்றும் நிஜாமுதீன் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முகர்பா செளக்கிலிருந்து பீர்கார்கி செளக் வரையிலும் உள்ள வெளிப்புற வட்டச் சாலை மற்றும் தெளலா கான் முதல் வசிர்பூர், மதுரா சாலை, தேசிய நெடுஞ்சாலை 8, தேசிய நெடுஞ்சாலை 24, ஜிடி சாலை ஆகியவற்றை காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காலை 7 மணி முதல் 11 மணி வரை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும் ரோகினி பகுதியில் உள்ள ஜப்பான் பூங்கா செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications