அரசு முடிவுக்கு ஆமாம் சாமி போட மாட்டேன் - விஜயகாந்த்
சென்னை: கலர் டிவி திட்டம் தொடர்பான அரசுக் நான் இடம் பெற்றிருந்தால், நிச்சயம் அனைத்து முடிவுகளுக்கும் மற்றவர்களைப் போல ஆமாம் சாமி போட்டிருக்க மாட்டேன் என்று தேமுதிக தலைர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணையும் விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசுகையில்,
வீட்டுக்கு ஒரு டிவி கொடுப்பதற்கு பதிலாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுங்கள் என நான் சொல்கிறேன். டிவி கொடுப்பது கவர்ச்சி திட்டம்.
இதுகுறித்து நான் கூறினால், டிவி வாங்குவதற்கான டெண்டர்களை முடிவு செய்யும் குழுவில் தேமுதிக எம்.எல்.ஏ.வையும் இடம் பெறுமாறு கேட்டோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார் என முதல்வர் பதில் சொல்கிறார்.
என்னை ஒரு கட்சியின் தலைவராக குறிப்பிடாமல் தேமுதிக எம்.எல்.ஏ. எனக் குறிப்பிட்டுள்ளார். இதே பாணியில் நான் அவரை விமர்சிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
டெண்டரை முடிவு செய்யும் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தால் மற்றவர்களை போல் ஆமாம் சாமி போட்டிருக்க மாட்டேன்.
ஏழைகளுக்கு டிவி கொடுப்பதாக கூறிவிட்டு வசதியானவர்களுக்கு கொடுக்கிறார்கள். கழுத்து நிறைய நகை போட்டவர்கள் தான் அரசின் இலவச வண்ண தொலைக்காட்சியை வாங்கி செல்கிறார்கள்.
சிறப்பு பொருளாதார மையம் அமைந்தால் 50 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.
திமுக இளைஞர் அணி மாநாட்டில் இளைஞர்களுக்கு ஏதோ திட்டம் கொண்டு வருவதாக கூறினர். கடைசியில் சேது சமுத்திர திட்டம் என்ற பழைய விஷயத்தைக் கூறிவிட்டு மாநாட்டை முடித்துவிட்டனர்.
முன்னுக்கு பின் முரணாக பேசும் வார்த்தை ஜாலம் தான் இந்த ஆட்சியில் அதிகம் உள்ளது என்றார் விஜயகாந்த்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications