புத்தாண்டை வரவேற்க சென்னை தயார்
சென்னை: 2008ம் ஆண்டை வரவேற்க சென்னை மாநகரம் தடபுடலாக தயாராகியுள்ளது. பாதுகாப்பான கொண்டாட்டத்தை உறுதி செய்ய காவல்துறையும் சகல ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளது.
2007ம் ஆண்டு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. 2008ம் ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ரெடியாகியுள்ளன
தமிழகத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு அனைத்து மாநகரங்களும் தயாராக உள்ளன.
சென்னை நகரில் வழக்கம் போல இந்த ஆண்டும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நட்சத்திர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்களில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோவில்கள், கிறிஸ்தவ பேராலயங்கள், மசூதிகளிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஹோட்டல்களில் இன்று நள்ளிரவு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நடனம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உல்லாச விருந்தகுள் என தடபுடலான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன.
லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் பிரேசில் மற்றும் ஹாலந்திலிருந்து வந்துள்ள நடனக் குழுவினர் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவுள்ளனர்.
தாஜ் பிஷர்மேன் கேவ் ஹோட்டலில், அராபிய இரவுகள் என்ற பெயரில் பெல்லி நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் புத்தாண்டைக் கொண்டாட இப்போதிருந்தே மக்கள் கூட ஆரம்பித்துள்ளனர். நள்ளிரவில் அவர்கள் ஹேப்பி நியூ இயர் என போடப் போகும் கூச்சலைக் கண்டு அலற கடலும் தயாராக உள்ளது.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை எடுத்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது காவல்துறை.
5000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முக்கிய இடங்களில் சிறப்பு காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 2ம் தேதி வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications