கணவரின் கள்ளக்காதலி வீட்டுக்கு தீவைத்த பெண் கைது
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கணவரின் கள்ளக்காதலியின் வீட்டுக்கு தீவைத்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பான்குளத்தை சேர்ந்தவர் ரஜினி. இவரது மனைவி சக்தி. நல்லூர் சிவகாமி புரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ரத்தினம்.
குறிப்பான்குளத்தில் உள்ள பீடிக்கடைக்கு ரத்தினம் தினமும் செல்வாராம். அப்போது ரத்தினத்திற்கும், ரஜினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த விவகாரம் ரஜினியின் மனைவிக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கணவரையும், ரத்தினத்தையும் அவர் கண்டித்துள்ளார். இருந்தாலும் இருவரும் கள்ளத் தொடர்பை தொடர்ந்துள்ளனர்.
இதனால் சக்தி ஆத்திரமடைந்தார். சம்பவத்தன்று சக்தி மண்ணெண்னெய் கேனுடன் நல்லூர் சென்றார். அங்கு ரத்தினத்தின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தாராம்.
இதில் வீட்டில் இருந்த பொருட்கள் கருகின. இதுபற்றி ரத்தினம் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தார். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications